தமிழைப் பற்றி அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்...........

 

2500 ஆண்டாயினும் தமிழ் இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களும், தொல்காப்பிய இலக்கணமும், இன்று படித்தாலும் பொருள் புரிகிறது.

இது பிற மொழிகளுக்கு இல்லாத சிறப்பாகும்.

 

வ.ஐ. சுப்பிரமணியம்

(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம்)

 

 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.

 

 

  - மாபாவலன் பாரதி

 

திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று யான் தமிழ் பயிலத் தொடங்கினேன்.

 

 

- காந்தியடிகள்

 

செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியையும் இலக்கியப் பெருமையில் இலத்தின் மொழியையும் வெல்ல வல்லது தமிழ்மொழி.

 

 

 

 

 

   - அறிஞர் வின்சுலோ

 

தம் கல்லறையில் மேல் “இங்கே தமிழ் மாணவர் உறங்குகிறார் “ என்று கல்லில் பொறித்து வைக்குமாறு விருப்பு முறி (உயில்) எழுதி வைத்த முனைவர் ஜி.யு.போப் பாதிரியார்

 

  

 தமிழ்மொழி எம்மொழிக்கும் தாழ்ந்த மொழியன்று

 

 

செந்தமிழே உயிரே நறுந்தேனே

செயலினை மூச்சினை உனக்களித்தேனே

நைந்தாயெனில் நைந்துபோகும் என் வாழ்வு

நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே !

 

 

 

    - பாவேந்தர் பாரதிதாசனார்

 

 

தமிழ் பண்டையது; நலம் சிறந்தது;

உயர் நிலையில் உள்ளது; வடமொழி

உதவியின்றி இயங்கவல்லது.

 

 

 

 மொழியறிஞர்

டாக்டர் கால்டுவெல்

Dr.Calwell

 

 

கன்னடமும் களிதெலுங்கும்

கவின்மலையாளமும் துளுவும்

உன் உதரத்து உதித்தெழுந்த்தே

ஒன்று பல ஆயிடினும்

ஆரியம்போல் உலக வழக்கொழிந்து

சிதையா உன் சீரிளமை திறம் வியந்து

செயல் மறந்து வாழ்த்துமே !

 - பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை

 

 

தமிழியல் ஆய்வுக் களம்

Free Web Hosting