கடல்ஓடா கால்வல் நெடுந்தேர்; கடலோடு

               நாவாயும் ஓடா நிலத்து ( குறள் 496)

 

தன் ஆற்றலும் தன் கைப்பொருளும் அமைந்து; இயங்கிவெல்லுதற்கு ஏற்ற இடத்தில் இருந்துகொண்டு எவ்வினையையும் எண்ணித்துணிந்து செய்தல் வேண்டும். அது எதுபோல என்றால், வலிமையான சக்கரங்களைக்கொண்ட தேரானது; நிலத்தில் நன்கு செயற்படவல்லது; ஆனால், கடலில் அதனால் ஆவதொன்றுமில்லை. அதேபோல, கடலில் நிலையறிந்து செலுத்துவோர் செலுத்தும்வகையால் செயற்பட்டுப் பயன்படவல்லது கப்பல். ஆனால், நிலத்தில் அதனால் ஆவதொன்றுமில்லை. எண்ணித்துணிதலோடு கைகூடவல்ல இடமும் அறிந்து செய்க.

 

 

Free Web Hosting