அந்தணர் என்போர் அறவோர்மற்(று) எவ்வுயிர்க்கும்

             செந்தண்மை பூண்டொழுக லான்         ( குறள் 30)

 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்றபடி, தன்மனத்தினிடத்தே ஏற்பட்ட மாசுகளை ஆராய்ந்துபார்த்து அகற்றியவர்களினிடத்தில் துலங்குகின்ற தூய்மையின் வெளிப்பாடே அறம். அவ்வறத்தை எல்லா நிலைகளிலும் நன்குக் கடைபிடித்து நடப்பவர்களே அறவோர். அவர்களிடத்தில் அறம் தழைத்துள்ளபடியால், அவர்கள் மக்கள் என்று மட்டுமில்லாமல் எல்லா உயிர்களிடத்திலும் நடுவுநிலைமையும் கைமாறு கருதாத அருளுணர்வும் கொண்டு வாழ்ந்து வழிகாட்டியிருப்பர்.

Free Web Hosting