சிறப்பு நோக்கம்  
1. தமிழ்ச்சொல் அகழ்வாராய்ச்சி - வேர்ச்சொல் ஆராய்ச்சி நடத்துதல்.

2. தமிழ்சொல் பிறமொழிகளில் பயன்பட்டுவரும் பான்மைகளை ஒப்பியல் முறையில் வெளிபடுத்துதல்.

3. தமிழ் மற்றும் பிற உலகமொழிகளுக்கிடையே உள்ளார்ந்து இழைந்துகிடக்கும் உறவுத்தடங்களையும் தலங்களையும் கண்டுகாட்டல்.

4. தமிழ்மொழியின் உணமையான வடிவத்தைத் தற்காத்தல்.

5. காலவகையினால் வரும் புதுமைகளை மரபுகெடாமல் உள்வாங்கி வள்ர்த்தல்.

6. பிறமொழிகளில் ஏற்படும் நல்வளார்ச்சிகளைத் தமிழ்மயம் ஆக்குதல்.

7. தமிழைப் பிற மொழிகளின் மேலீடுகள், அழுத்தங்கள், அடிமைப்படுத்தங்கள் ஆகியவற்றிலிருந்து மீட்டு நிலைபடுத்துதல்.

8. தமிழே உலக முதற்றாய்மொழி என நிறுவப்பட்டுள்ள உண்மையைப் பரவச் செய்தல்.

9. தமிழர்க்கும் தமிழர் அல்லாத்தவர்களுக்கும் தமிழ்மீது உயர்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் நிலைபெறுமாறு பணிச்செய்தல்.

10. தமிழின் தனித்தன்மைகளைக் கட்டிக்காத்தல்.

11. உலக ஒருமைப்பாட்டுக்கு உதவும் மொழியின் உறவுக்கூறுகளைப் பேணுதல்.

12. உலகப் பல்கலைகழகங்கள் முதலிய உயர்க்கல்வி மற்றும் ஆய்வுநிறுவனங்களோடு கருத்துறவும் ஆய்வுப்பறிமாற்றமும் செய்துகொள்ளுதல்.

13. சரியான மொழியாக்கம், சொல்லாக்கம், மொழிப்பெயர்ப்பு, ஒலிப்பெயர்ப்பு வேண்டிவோர்க்கு வழிகாட்டுதல்.

14. அறக்கட்டளை நிறுவி ஆய்வு, சொற்பொழிவு, வெளியீடு, பயிற்றுவிப்பு முதலிய நிலைகளில் நெறிசெய்து நடத்துவித்தல்.

15. ஆய்வரங்கு, கருத்தரங்கு, கருத்தாய்வு, கலந்துரையாடல், பொழிவுரை முதலான வடிவங்களில் நிகழ்ச்சிகள் நடத்துதல்.

16. ஆய்வறிக்கைகள், நூல்கள், செய்தி இதழ்கள் ஆகிய எழுத்து மற்றும் ஒலி, ஒளி, இணைய ஊடங்கங்கள் வழியாகத் தமிழியல் கருத்துகளை உலகெங்கிலும் பரவச்செய்தல்.

 
Free Web Hosting