::  பொதுச் செய்தி : பாகம் 1

 1 நம்முடைய தலையில் 1 கனமம் (மில்லியன்) முடிகள் உள்ளன.  நம்முடைய உதிரத்தில் 18 பில்லியன் சிவப்பு அணுக்கள் உள்ளன.
 2 ஒரு மாந்தன் வாழும் கட்டத்தில் அவனுடைய மூளை 100 கனமம் (மில்லியன்)  தகவல்களைச் சேகரித்துக் வைத்துக்கொள்ள முடியும்.
 3 நம்முடைய கண்களால் 7 கனமம் (மில்லியன்) நிறங்களை வேறுபாடு காண முடியும்
 4 நம்முடைய இருதயம் ஓர் ஆண்டில் 36 கனமம் (மில்லியன்) முறை துடிக்கிறது.
 5 மாந்த உடலின் மிகவும் திடமான பாகம் மண்டை ஓடு. ஆனால் பல்லின் மேல் பாகத்தில் இருக்கும் (இனேமல்) அதனைவிட திடமானது.
6 ஆமைகளில் சுமார் 275 வகைகள் உண்டு. சில ஆமைகள் கடலில் வாழ்கின்றன; சில குளம் குட்டைகளிலும், நிலத்திலும் வாழ்கின்றன. ஆனால் எல்லா ஆமைகளும் நிலத்தில்தான் முட்டையிடுகின்றன. ஆமைகளுக்குப் பற்கள் கிடையாது. ஆனால் அதன் தாடைகள் தடித்துப் பற்களாக உதவுகின்றன. ஆமை, பெரும்பாலும் சிறியதாக இருக்கும். ஓர் அடிக்கு மேல் அது வளர்வதில்லை. ஆனல் மூன்று, நான்கு அடி நீளம் வரை வளரும் ஆமைகளும் உண்டு. நீரில் வாழும் சில ஆமைகள் 8 அடி நீளம் உள்ளவை. ஆமைகள் 120 ஆண்டுகளுக்கு மேலும் வாழும். உயிரினங்களில் அதிக காலம் வாழ்பவை ஆமைகளே. ஆமை ஓட்டிலிருந்து சீப்புகள், சிறு பெட்டிகள், கண்ணாடி தாங்கிகள், புருசுக்கொட்டைகள் முதலியன செய்கிறார்கள்.
7

பெய்கல் ஏரி

உலகிலேயே ஆழமான, பரந்த பழமையான ஏரி பெய்கல் ஏரி ஆகும். அதனுடைய பரப்பளவு 31,4761 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாகும். இந்த ஏரி ரஷியாவில் உள்ளது.

 8

உலகப் புகழ் ஓவியம்.

லியோனார்டோடா வின்சி, 15ம் நூற்றாண்டில் வரைந்த மோனலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்ற ஓவியமாகும். மோனலிசா இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவராவார். இந்த ஓவியத்தைவரைய எடுத்துக்கொண்ட நான்கு ஆண்டுகாலக் கட்டத்தில் மோனாலிசாவின் முகத்தில் வசீகரமான புன்னகையை வரவழைக்க இதமான இசையை ஓடவிட்டு ஓவியத்தை வரைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஓவியம் பாரிஸ் நகரின் தொல்பொருள் காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 9 ஒரு நாளைக்கு ஓரிரு வாழைப்பழங்களைச் சாப்பிட்டு வருவது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். கர்நாடக மாநிலத்தின் மணிபால் கல்லூரியின் ஆய்வின்படி ஒரு நாளைக்கு 2 வாழைப்பழங்களைச் சாப்பிடுவர்களுக்கு, ஒரு வாரத்திற்குப் பிறகு அவர்களுடைய இரத்த அழுத்தம் 10% குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
10 பொதுவாக மலைப்பாம்புகள் 8 - 60 முட்டைகள் இடும். ஆனால் இந்தோனோசிய விலங்குகாட்சி சாலையில் மலைப்பாம்பொன்று ஒரே நேரத்தில் 124 முட்டைகளிட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
 

      :: தொகுப்பாசிரியர் மு. மதிவாணன்        

Free Web Hosting