கழங்காடுதல்

 

மகளிர் விளையாட்டுகளில் ஒருவகை. இதைச் சுட்டிப் பிடித்தல் என்றும் வழங்குவர். வீடுகளின் திண்ணைகளில் அல்லது மேடான பகுதிகளில் “கழங்கினை“ (கழங்கு-சூது, கழற்சி விளையாட்டு, கழற்சிக்காய்) வைத்து ஆடுவர். இப்பொழுது இது பாறைகளித்தல் அல்லது சுட்டி பிடித்தல் என்று வழங்கப்படுகிறது. கழங்கிற்குப் பதில் சிறிய உருளை வடிவக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

செறியரிச் சிலம்பின் குறுந்தொடிமகளிர்

       பொலஞ்செய் கழங்கிற் தெற்றியாகும்

 

 

 

வட்டாடல்

 

தமிழர் விளையாட்டில் மிகவும் சிறப்புற்றிருந்த விளையாட்டு வட்டாடல் ( வட்டாடல்-வட்டை உருட்டி சூதாடுதல்) இதற்காக இழைத்துக் காய்களை நகர்த்தி விளையாடும் இவ்வகை ஆட்டம் ஒருவகைசூதாட்டத்தை ஒத்தது. இவ்விளையாட்டை திருவள்ளுவர்

 

    அரங்குஇன்றி வட்டுஆடி அற்றேநிரம்பிய

     நூலின்றிக் கோட்டி கொளல்( 401)

 

ஆகவே இந்த வட்டாடல் விளையாட்டு குறள் காலத்து விளையாட்டு என்பது தெரிய வருகிறது. எனவே பழந்தமிழரும் விளையாட்டுகளிலும் அறிவியல் வழி சிந்தனை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே தமிழருக்கு மரபு சார்ந்த பெருமையாகிறது

 

     

 

வில்விளையாட்டு.

 

வில் என்பது அம்பினைச் செறித்துக் குறிபார்த்து எய்தல். வில் வித்தையைக் கற்றுத்தர கை தேர்ந்த ஆசிரியர்கள் இருந்துள்ளனர். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் விற்போர்,வாட்போர் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். தஞ்சையில் உள்ள கல்வெட்டில் இராஜ இராஜசோழனின் காலத்தில் நடந்த விற்போர் பற்றிய செய்தி இருக்கிறது. ஆங்கிலத்தில் “Archery” ( வில்வித்தை) என்று அழைக்கப்படும்

 

 

 

 

கலைக்கூத்து

 

கக்கூத்து எனப்படும் கயிற்று நடனமும் தமிழர்களில் வியாட்டுகளில் ஒன்றாகும். 60-களிலே இருந்ட இக்கலை வலிவிலந்து போய் இருக்க மேலைநாடுகளில் அது பரிணாமம் பெற்று உடல்வித்தையாக ( Gymanatics) மாறி நிற்கிறது.

 

 

Free Web Hosting