கிலி கிலியாடல்

 

கிலியாடல் என்பது சிறுவர்கள் கிலுகிலுப்பை என்னும் கருவியைக் கொண்டு ஒலியெழுப்பிக் மகிழ்கிற விளையாட்டு. சங்க காலத்தில் இருந்து இந்த வழக்கம் வேறுபாடின்றி இன்றளவும் தொடர்ந்து வருகின்றது. சிறுபாணாற்றுபடை என்ற இலக்கியத்தில்..

 

கிளர்பூண் புதல்வரொடு கிலிகிலியாடும்

என்று வருகிறது. இன்று முதல் செல்வந்தர் வீடுகளில் உள்ள குழந்தைகளின் அழுகையை அடக்க தம் தகுதிக்கேற்பவோ, தகுதிக்கு மீறியதாகவோ கிலுகிலுப்பைகளை வாங்கிக் குழந்தைகள் கைகளில் கொடுக்கப்படுவது நம் கண்கூடு.

 

 

கோழிப்போர்

 

தமிழர்கள் விலங்குகள்,பறவைகள் போன்றவற்றுக்கும் இடையே வீரம் இருக்கிறது என்பதைக் காட்ட அவைகளை மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தனர். சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் (305)

குப்பைக் கோழித்  தனிப்போர் போல என்று குறிப்பிடுவதிலிருந்து கோழிப்போர் சங்க காலம் தொட்டு வழக்கிலிருந்தமையை அறிய முடிகிறது. இவ்விளையாட்டு இன்று பல நாடுகளுக்கும் பரவி வருகிறது.

 

 

 

 

சடுகுடு

 

சடுகுடு என்பது தமிழர்களின் பழம்பெரும் விளையாட்டாகும். தமிழகத்தில் “தினத்தந்தி நாளிதழை நிறுவிய சி.பா.ஆதித்தனார் இவ்விளையாட்டு வளர் பல முயற்சிகளை மேற்கொண்டார்.. 60களில் சடுகுடுவாக இருந்த இவ்விளையாட்டு இப்போது கபடியாக மாறியிருக்கிறது.

 

 

 

 

தாயம்

 

தாயம் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. உள்ளரங்க விளையாட்டு எனச்சொல்லலாம். பழங்கால நாகரிகத்தில் தாய விளையாட்டில் சுடுவன் காய்களைப் பயன்படுத்தி விளையாடினர்.

 

 

 

 

 

 

பல்லாங்குழி

 

பல்லாங்குழி என்பது பெண்களால் ஆடப்படும் விளையாட்டு. தரையில் அல்லது மரப்பலகையில் உள்ள பதினான்கு அல்லது இருபத்டி நான்கு குழிகளுள் புளிய விதைகளை அல்லது சோழிகளை வைத்து விளையாடுவர். ஒரு சமயத்தில் இருவர் விளையாடலாம். இது கணித முறை சார்ந்த விளையாட்டாகும்.

 

 

 

 

கிட்டிப்புள்

 

இது ஆடவர்களால் ஆடப்படும் வெளியரங்கு விளையாட்டு. இந்த விளையாட்டில் பெரிய குச்சியும், சிறிய குச்சியும் பயன்படுத்தப்படுகின்றன. கிராமங்களில் பரவலாக இருந்த இவ்விளையாட்டு தற்கால கிரிக்கெட் விளையாட்டிற்கு மூல வடிவமாகக் கருதப்படுகின்றது.

 

 

Free Web Hosting