சிலம்பம்

 

இது வயது வந்த இளைஞர்களாலும் நடுத்தர வயதுடையவர்களாலும் விளையாடப்படுகிறது. இது ஆண்களுக்கு உரிய விளையாட்டு. இவ்விளையாட்டு பரத நாட்டியத்துடன் ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிலம்பாட்டத்தில் முக்கியமான காலடிகள் பரதக் காலடியோடு ஒத்திருக்கிறது. சிலம்பாட்டம் எனபது கம்பை மட்டும் வைத்து விளையாடக்கூடியது அல்ல. சுருள்வால், ஈட்டி, கட்டாரி, சங்கிலி, மான்கொம்பு, போன்றவற்றை வைத்தும் இவ்விளையாட்டை விளையாடலாம். முன்பு போர்ச்சிலம்பம் இருந்திருக்கிறது. அதை போருக்கு மட்டும் பயன்படுத்தியிருக்கின்றனர். இரண்டாவது அலங்காரச் சிலம்பம். திருவிழா காலங்களில் முக்கிய நிகழ்ச்சிகளில் கம்பைப் பலவிதமாகச் சுழற்றுவது தீச்சிலம்பம்.

 

 

 

நன்றி,   

வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்  

எடுத்தாளப்பட்டது.   

 

Free Web Hosting